கோபாலசமுத்திரம் பள்ளியில் இடையூறாக இருக்கும் சிலாப் அகற்ற வேண்டும்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் ஊராட்சிக்கு உட்பட கோபாலசமுத்திரம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுபகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வகுப்பறைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், கட்டிடங்கள் நாளுக்குநாள் சேதமாகி வீணாகி வாகிறது. இந்நிலையில் பள்ளி வளாகத்தில் ஏற்கனவே இடித்து அகற்றப்பட்டு கட்டிடங்களில் துகள்கள் மற்றும் அந்த கட்டிடத்தின் மேல் சிலாப்பின் பெரியளவிலான ஒரு பகுதி துண்டு அப்படியே வகுப்பறை முன்பு கிடக்கிறது. இதில் ஆபத்தான நிலையில் அதில் உள்ள கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு ஆபத்தான நிலையில் உள்ளது.

இதனால் மாணவர்கள் அப்பகுதியை கடக்கும்போது தவறி விழுந்து பாதிக்கப்படுகின்றனர். அதேபோல் விளையாட்டு நேரங்களில் விளையாட்டும் மாணவர்கள் அதில் தவறி விழுந்து சிறு சிறு காயங்கள் ஏற்படுகிறது. இதன் மீது மாணவர்கள் ஏறி விளையாடினால் தவறி விழுந்து கம்பி குத்தி தலையில் பலத்த காயம் ஏற்பட வாய்ப்புகள் எனவே பள்ளி நிர்வாகம் இங்கு படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் கிடக்கும் கட்டிட துகள்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும் கிராம மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: