கூடலூர் நகராட்சி பஸ் ஸ்டாண்டில் ரூ.2.30 கோடியில் விரிவாக்க பணிக்கான பூமி பூஜை

கூடலூர்: கூடலூர் நகராட்சியில் ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிக்கான பூமி பூஜை நேற்று எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன் தலைமையில் நடைபெற்றது. கூடலூர் நகராட்சி பஸ்டாண்ட் வளாகத்தில் புதிதாக 10 கடைகள், 15 பஸ் நிறுத்த இடங்கள், தாய்மார் பாலூட்டும் அறை, பெண்கள் காத்திருப்பு அறை, ஓட்டுனர் நடத்துனர் ஓய்வு அறை, பயணிகள் காத்திருப்பு அறை, கழிப்பறை, இருசக்கர வாகன காப்பகம் என நகர்ப்புற அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு நிதி ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் விரிவாக்க பணிக்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. எம்எல்ஏக்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்,

நகர்மன்ற தலைவர் பத்மாவதி லோகந்துரை, ஆணையாளர் காஞ்சனா, மேலாளர் ஜெயந்தி, திமுக தேனிமாவட்ட துணைச்செயலாளர் குரு இளங்கோ, கூடலூர் நகரசெயலாளர் லோகந்துரை, மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து கூடலூர் 8ஆவது வார்டு ராஜீவ் காந்தி நகர் பகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 12 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியின்போது, திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: