மன்னர் கல்லூரி பட்டமளிப்பு விழா

சிவகங்கை: சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. இக்கல்லூரியில் மார்ச் 24 முதல் மார்ச் 26 வரை மூன்று நாட்கள் பட்டமளிப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 2022ம் ஆண்டு பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேற்று முன்தினம், 2021ம் ஆண்டு பல்கலைக்கழக தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேற்று பட்டமளிப்பு விழா நடந்தது. நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் துரையரசன் வரவேற்றார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் மணிசங்கர் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ உள்ளிட்ட இளநிலை பட்டதாரி மாணவ, மாணவிகள் 659 பேருக்கும், எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.காம் உள்ளிட்ட முதுகலை பட்டதாரி மாணவ, மாணவிகள் 184 பேருக்கும் என மொத்தம் 843 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

Related Stories: