உலக காச நோய் தினம் அனுசரிப்பு

பாலக்காடு: பாலக்காடு மாவட்ட சுகாதாரத்துறை, மாவட்ட டி.பி., யூனிட்., தேசிய சுகாதார மையம் சார்பில் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பஞ்சாயத்து ஹாலில் நடைபெற்ற பாலக்காடு மாவட்ட சுகாதாரத்துறை, மாவட்ட டி.பி., யூனிட்., தேசிய சுகாதார மையம் சார்பில் உலக காச நோய் தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பஞ்சாயத்து சுகாதாரத்துறை செயற்குழுத்தலைவர் ஷாபிரா குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து பேசியதாவது: தொற்றுநோய் குறித்த அறிகுறிகளை பொதுமக்களுக்கு விழிப்புணர்வடைய செய்தால் மட்டுமே காச நோயை முழுமையாக நீக்கி விட முடியும். அனைத்துறையினரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டால் காச நோயை அகற்றி விடமுடியும். கேரளாவில் இதற்கான தீவிரமுயற்சிகள் சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட வருகின்றனர் என அவர் பேசினார். நிகழ்ச்சிக்கு பாலக்காடு மாவட்ட மருத்துவ அதிகாரி டாக்டர்.கே.பி.ரீத்தா தலைமைத் தாங்கினார். பாலக்காடு மாவட்ட மருத்தவக்கல்லூரி மருத்துவமனை இயக்குநர் ஓ.கே.மணி, உறுதிமொழி ஏற்றார். நிகழ்ச்சியில் துணை டி.எம்.ஓ., டாக்டர். செல்வராஜ், மாவட்ட மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர். நாஷ், மகப்பேறு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர். பிரேம்குமார், ஐ.எம்.ஏ., தலைவர் அருண், நோடல் அதிகாரி டாக்டர். சலின் ஏலியாஸ், மாவட்ட டி.பி., அதிகாரி (பொறுப்பு) டாக்டர். சஜீவ்குமார், ஆர்.சி.எச்., அதிகாரி அனிதா, ஆகியோர் பங்குக்கொண்டனர்.  காச நோய் தினத்தையொட்டி பாலக்காடு நகராட்சி பகுதியில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை டாக்டர். ரீத்தா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

Related Stories: