திண்டுக்கல்லில் ரக்கு வாகனங்களை திருடிய 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் 2 சரக்கு வாகனங்களை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். ண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அப்பாஸ் மந்திரி. இவருக்கு சொந்தமான 2 சரக்கு வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து அப்பாஸ் மந்திரி அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். லும் இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி பாஸ்கரன் உத்தரவின்பேரில், நகர் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில், மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் எஸ்ஐ மலைச்சாமி, எஸ்எஸ்ஐ வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான், செல்வி ஆகியோர் உதவியுடன் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சரக்கு வாகனங்களை திருடியது, கோயம்புத்தூரை சேர்ந்த முகமது ஆசிக் (27), தேனி மாவட்டத்தை சேர்ந்த கணேசன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 2 சரக்கு வாகனங்களையும் மீட்டனர்.

Related Stories: