×

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு

பொன்னேரி, மார்ச் 26: மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக அரசின் சாதனை விளக்க தெருமுனை பொதுக்கூட்டம், ஒன்றிய செயலாளர் காணியம்பாக்கம் ஜெகதீசன் தலைமையில் காணியம்பாக்கம் பஜாரில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் மீஞ்சூர் சுப்பிரமணி, கூளூர் கதிரவன், எம்.எல்.ரவி, வைதிகை செல்வ சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டார். பின்னர், கல்வெட்டுகளை திறந்து வைத்து, கட்சி கொடியேற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், தலைமை கழக பேச்சாளர்கள் தமிழ் சாதிக், சாம்ராஜ், மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ஜி.ரவி, மீஞ்சூர் கோதண்டம், ஒன்றிய கழக நிர்வாகிகள் தன்சிங், ஸ்டாலின், முனுசாமி, குணாளன், குமார், கவிதா மனோகரன், இளஞ்செல்வி பார்த்திபன், திருவெள்ளவாயல் முத்து, தேசராணி தேசப்பன், தேவராஜ், காட்டூர் ராஜேஷ், அண்ணா தாசன், ஹரி, நேதாஜி, சார்லி, ஹரிதாஸ், பிரகாசம், வக்கீல் ராதா மணவாளன், ஏலியம்பேடு ஜெகன், கவுன்சிலர் கதிரவன், மேலூர் நெல்சன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணி, இளைஞரணி என பலர் கலந்து கொண்டனர். இறுதியில் ரவி நன்றி கூறினார்.

Tags : Meenjur South Union DMK ,DJ Govindarajan ,MLA ,
× RELATED திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான...