×

 சந்தோஷி கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டம்: டிஎஸ்பி பங்கேற்பு

மதுராந்தகம், மார்ச் 26: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பையம்பாடி கிராமத்தில்  சந்தோஷி கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு நாட்டு நல பணித்திட்டம் மாணவர்கள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் இணைந்து போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. போதையே போ போ போ எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அ.சண்முகம் தலைமை தாங்கினார். மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஜான்சன் முன்னிலை வகித்தார். செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி எஸ்.கே.துரை பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களிடையே போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துக் கூறினார்.  சந்தோஷி கல்லூரி மேலாளர் எம்.குருநாதன், தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் செல்வம், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ர.காட்வின் ச.ஏழுமலை மற்றும் கல்லூரி மாணவ மாணவியகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Santoshi ,College ,
× RELATED தஞ்சாவூர் சந்தோஷி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்