மாவட்ட கலெக்டர் தகவல் அய்யம்பேட்டை பகுதியில் திடீரென பெய்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தது

தஞ்சாவூர்: அய்யம்பேட்டை பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அய்யம்பேட்டை பகுதியில் அதிகாலை பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தது. அய்யம்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் அதிகாலை திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

அய்யம்பேட்டை, பசுபதிகோவில், சக்கராப்பள்ளி, மாகாளிபுரம், வழுத்தூர், கணபதி அக்ரகாரம், பட்டுக்குடி, உள்ளிக்கடை, பெருமாள் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடும் வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் இந்த மழையினால் நிம்மதி அடைந்தனர். இப்பகுதிகளில் தற்போது தான் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன.

இதுகுறித்து விவசாயி கூறியதாவது: இப்போது தான் இந்த பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. காலம் தவறி பெய்த இந்த மழையால் அறுவடைக்கு தயாரான அனைத்து நெற்பயிர்களும் சாய்ந்தது. மேலும் தற்போது பணி பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் தற்போது பெய்த மழையால் அறுவடை செய்த நெல் மட்டும் அல்லாமல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களும் சேதம் அடைந்துள்ளது. இனி இந்த வயல்களில் ஈரப்பதம் காய்ந்தால் தான் இயந்திரம் மூலம் அறுவடையும் செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: