யுகாதி திருநாள் கொண்டாட்டம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் கம்மவார் உறவின்முறை சார்பில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆண்டிபட்டி மைய பகுதியில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின் கோயிலில் இருந்து ஊர்வலமாக சென்று மன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் பாப்பம்மாள்புரம் மண்டபத்தில் சமய சொற்பொழிவு நடைபெற்றது. இதில் 70வயதுக்கு மேற்பட்ட தம்பதிகள் கௌரவிக்கப்பட்டனர்.

Related Stories: