மாபெரும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி மதுரையில் துவக்கம் நாளை வரை நடக்கிறது

மதுரை: பிரின்ஸ் இந்தியா எக்ஸ்சிபிஷன் நிறுவனம் சார்பில் “கன்ஸ்ட்ரக்டிவ் 2023’’ என்ற பெயரில் மாபெரும் கட்டுமான கண்காட்சி மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று துவங்கியது. நாளை வரை கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் ஆர்க்கிடெக்ட்கள், சிவில் இன்ஜினியர்கள், பில்டர்கள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் கட்டுமான பொருட்கள், வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான உள் மற்றும் வெளி அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் துவங்கி தொழிற்சாலைகள் உள்பட அனைத்துவிதமான கட்டிடங்கள் கட்டுவதற்கும் தேவையான கட்டுமானப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

பேன்ஸி கதவுகள் பைப் பிட்டிங்குகள், ஷவர்கள் மற்றும் துணை கருவிகள், திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் ஏர்பில்டர்கள், வாட்டர் பில்டர், பியூரிபயர்கள், பவர் டூல்ஸ் மற்றும் பாதுகாப்பு கருவிகள், எலெக்ட்ரிக் மற்றும் சோலார் வாட்டர் ஹீட்டர்கள் உள்ளிட்ட பொருட்களும் உள்ளன. பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனங்கள், கிரீன் பில்டிங்ஸ் மற்றும் நிறுவனங்கள் அபார்ட்மெண்ட், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் என கண்காட்சியில் 80 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சியை பொதுமக்கள் மற்றும் புதிய வீடுகள் கட்ட திட்டமிடுவோர் ஆர்க்கிடெக்ட்கள், பில்டர்கள் இண்டீரியர் டெக்கரேட்டர்கள் சிவில் மற்றும் ஸ்டக்ட்சுரல் என்ஜினீயர்கள் பிராப்பர்ட்டி டெவலப்பர்கள், காண்ட்ராக்டர்கள் மற்றும் கன்சல்டன்ட்கள் என ஆயிரக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் இருந்து வந்து பார்வையிட உள்ளனர். காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கண்காட்சியை கண்டுகளிக்கலாம். அனுமதி இலவசம்.

Related Stories: