×

திண்டுக்கல் வடக்கு, தெற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் திமுக தலைமை கழகம் அறிவிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் ஒன்றிய திமுகவில் திண்டுக்கல் வடக்கு, திண்டுக்கல் தெற்கு ஆகிய 2 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திண்டுக்கல் வடக்கு ஒன்றியம் சீலப்பாடி, முள்ளிப்பாடி, தாமரைப்பாடி, ம.மூ.கோவிலூர், பெரியகோட்டை, பாலகிருஷ்ணாபுரம், அணைப்பட்டி ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் அகரம், தாடிக்கொம்பு ஆகிய 2 பேரூராட்சிகளுக்கு திண்டுக்கல் வடக்கு ஒன்றிய பொறுப்பாளராக நெடுஞ்செழியம் மற்றும் புதிதாக திண்டுக்கல் தெற்கு ஒன்றியம் ஏ.வெள்ளோடு, அடியனூத்து, தோட்டனூத்து, சிறுமலை, குரும்பபட்டி, பள்ளபட்டி, செட்டிநாயக்கன்பட்டி ஆகிய 7 ஊராட்சிகளுக்கு திண்டுக்கல் தெற்கு ஒன்றிய பொறுப்பாளராக வெள்ளிமலை ஆகியோரை நியமனம் செய்து திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.


Tags : Dindigul North and South ,DMK ,
× RELATED நீட் தேர்வை கண்டித்து திமுக மாணவர் அணி...