×

திருவாரூரில் வாடிக்கையாளரின் வைப்புத்தொகையில் கை வைத்த வங்கி செயலாளர் மீது மோசடி புகார்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியில் பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகத்தின் கீழ் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களிடம் இருந்து பலகோடி ரூபாய் வைப்பு தொகை பெறப்பட்டு நிர்வகித்து வரப்படுகிறது.இதன்படி கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் வாடிக்கையாளர்களின் வைப்பு தொகையை அவர்களுக்கு தெரியாமலேயே பல லட்சம் ரூபாய் எடுத்து ஊழல் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. 2016ஆம் ஆண்டு டெபாசிட் செய்திருந்த 15 லட்சம் ரூபாய் ஓய்வூதிய பணத்தை தம்முடைய கையெழுத்து இல்லாமலேயே கூட்டுறவு வங்கி செயலாளர் கையாடல் செய்துவிட்டதாக புன்னியூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் திருவாரூர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார். விசாரணையில் விக்ரபாண்டி கூட்டுறவு சங்க செயலாளர் ஜானகிராமன் தம்முடைய வங்கிக்கிளை வளர்ச்சிக்காக பணத்தை எடுத்து செலவு செய்தது தெரியவந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனில் முறைகேடு செய்தது போன்றே கூட்டுறவு வங்கி வைப்புத்தொகையிலும் பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இந்த முறைகேடு தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்டு தரவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள்ளது….

The post திருவாரூரில் வாடிக்கையாளரின் வைப்புத்தொகையில் கை வைத்த வங்கி செயலாளர் மீது மோசடி புகார் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur ,Central Cooperative Bank ,Thiruvarur District Koothanallur ,Tiruvarur ,
× RELATED 6,417 மாணவர்கள் புதிதாக சேர்க்கை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்