கணபதி கோயில் கும்பாபிஷேகம்

தேனி, மார்ச் 24: தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள வலம்புரி மஹா கணபதி ஆலயத்தில் மகா கும்பாபிசேக விழா நேற்று நடந்தது. தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள வெற்றிவேல் முருகன் கோயிலுக்கு பாத்தியப்பட்ட வலம்புரி மஹா கணபதி ஆலயத்தில் மகா கும்பாபிசேக விழா நேற்று நடந்தது. இனையடுத்து, நேற்று முன்தினம் காமேஸ்வரன் குருக்கள் தலைமையலான சிவாச்சாரியார்கள் கோயிலில் வாஸ்து சாந்தி பூஜை, அனுக்கை, விக்னேஷ்வர பூஜை, கோமாதா பூஜை புன்யாஹவாசம், மகா கணபதி ஹோமம், அன்னலட்சுமி ஹோமம், நவகிரஹ ஹோமம், மஹாபூர்ணாகுதி ஹோமம் நடத்தினர். இதனையடுத்து நேற்று காலை பூஜை செய்யப்பட்ட புனித தீர்த்தங்கள் மூலமாக கோயில் விமானத்தில் மஹா கும்பாபிசேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து, கோயில் அருகே அன்னதானம் நடந்தது.

Related Stories: