×

பகத்சிங் நினைவுநாள்

தேனி, மார்ச் 24: தேனியில் பகத்சிங் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் தேனி நகர், நேரு சிலை அருகே சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் 92 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்ஆர்.சக்கரவர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் வடிவேல் முருகன், நகர பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின்போது, தியாகி பகத்சிங்கின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags : Bhagat Singh Memorial Day ,
× RELATED துவரங்குறிச்சி அருகே சேதமடைந்த மின்கம்பம் புதிதாக மாற்ற கோரிக்கை