அண்ணாமலை பல்கலையில் தொலைதூரக்கல்வி சிறப்பு தேர்வு

காரைக்குடி, மார்ச் 24: அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தொலைதூரக் கல்வி வழியில் படித்து, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு நடக்கவுள்ளது என அண்ணாமலை பல்கலைக்கழக காரைக்குடி படிப்பு மைய பொறுப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2002 முதல் 2014 வரையிலான கல்வியாண்டில் தொலைதூரக் கல்வி வழியில் படித்த தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக வரும் மே மாதம் மற்றும் டிசம்பர் மாதம் இரு பருவங்களில் சிறப்பு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. மே மாதம் நடக்கவுள்ள சிறப்பு தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் www.coe.annamalaiuniversity.ac.in/bank/splddeapp.php என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் வரும் மார்ச் 31க்குள் பதிவு செய்யது கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: