×

₹2 கோடி அபகரிப்பு: வீட்டிலிருந்து மகிளா காங். நிர்வாகி வெளியேற்றம்

புதுச்சேரி,  மார்ச் 24: புதுச்சேரி, கோரிமேடு, பேட்டையான் சத்திரத்தைச் சேர்ந்தவர்  ஜோதீஸ்மதி (77). ஜிப்மரில் செவிலியர் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு  பெற்றவர். தட்டாஞ்சாவடியில் இவருக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 3  ஆயிரத்துக்கும் அதிகமான சதுரஅடி வீட்டிற்கு காங்கிரஸ் மகளிரணி நிர்வாகி  வரலட்சுமி வாடகைக்கு வந்தார். கடந்த 2002 முதல் வாடகை தராமல் இருந்ததாக  கூறப்படுகிறது. வாடகை கேட்ட ஜோதீஸ்மதியை மிரட்டியதோடு வீட்டினை காலி  செய்யவும் மறுத்ததாக தெரிகிறது.

 இதைத் தொடர்ந்து ஜோதீஸ்மதி வீட்டின்  நிர்வாக அதிகாரத்தை உறவினர் விஜயகுமாருக்கு கொடுத்துவிட்டு தங்கள்  பிள்ளைகளுடன் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். வீடு அபகரிப்பு தொடர்பாக  விஜயகுமார் புதுச்சேரி முன்சீப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை  விசாரித்த நீதிபதி வரலட்சுமியை வெளியேற்றிவிட்டு வீட்டை உரிமையாளர்களிடம்  ஒப்படைக்க உத்தரவிட்டார்.  அதன்பேரில் அமீனா வீராசாமி, கிராம நிர்வாக  அலுவலர் சிவபாலன் மற்றும் கோரிமேடு காவல்துறையினர் நேற்று முன்தினம்  வரலட்சுமியை வீட்டை விட்டு வெளியேற்றியதோடு வீட்டினை ஜோதீஸ்மதியின் பவர்  ஏஜெண்டான விஜயகுமாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Mahila ,Kong ,
× RELATED திருப்பதியில் 8 சிலைகள் திறப்பு...