கருங்குழி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுராந்தகம்: கருங்குழி பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சியில், உலக வனநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பேரூராட்சி தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மா.கேசவன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். தற்போது, பேரூராட்சிக்கு உட்பட்ட மலைப்பாளையம், மலைக்கோயில் சாலை, துரைக்குளம் சாலை ஆகிய இடங்களில் பூவரசு, கல்யாண முருங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான 200 மரக்கன்றுகள் நடப்பட்டன.

Related Stories: