ராகுல் காந்திக்கு சிறை தண்டனையை கண்டித்து பல்லடத்தில் காங்கிரஸ் சாலை மறியல்

பல்லடம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து பல்லடத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.  காங்கிரஸ் கட்சி சார்பில் பேருந்து நிலையம் முன்பு நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் வட்டார தலைவர் கணேசன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  இதில் நகர நிர்வாகிகள் எம்.பி.சதாசிவம், மணிராஜ், உத்தரமூர்த்தி, செந்தில்குமார், முருகன், நரேஷ்குமார், தமிழ்ச்செல்வி, வட்டார நிர்வாகிகள் ஜேம்ஸ், முருகேஷ், லாவண்யா, எச்.எம்.எஸ். தொழிற்சங்க மண்டல துணை செயலாளர் ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  இந்நிலையில், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்திய காங்கிரசாரை போலீசார் கைகளை பிடித்து அப்புறப்படுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: