திருவாரூர் வலங்கைமான் பகுதியில் வெறி நோயால் பாதிக்கப்பட்ட நாய்களை பிடிக்க நடவடிக்கை

வலங்கைமான்: வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் 10க்கும் மேற்பட்டோரை கடித்த நாயை பிடிக்க பேரூராட்சியினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன .இவ்வார்டுகளில் உள்ள 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினரில் சிலர் செல்லப்பிராணியாக வீட்டில் நாய்களை வளர்த்து வருகின்றனர். இவைகள் தவிர, சாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன இவைகள் சைவ உணவில் ஆர்வம் காட்டாமல் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை வேட்டையாடுவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் பேரூராட்சி பகுதிகளில் சுற்றிதிரியும் நாய்களை பிடிக்க அவ்வப்போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், கடந்த ஆண்டு நாய்களை உயிருடன் பிடித்து கருத்தடை செய்து மீண்டும் கடைவீதி பகுதிகளில் நாய்களை விட்டுச் சென்றனர் .

இந்நிலையில் நேற்று வலங்கைமான் தெற்கு அக்ரஹாரம் வடக்கு அக்ரஹாரம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை ஒரு நாய் கடித்து விட்டு சென்று விட்டது அந்த நாய் வெறி நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது . இந்நிலையில் 10க்கும் மேற்பட்டவர்களை கடித்த வெறி நோயால் பாதிக்கப்பட்ட நாயை பிடிப்பதில் பேரூராட்சியினர் ஆர்வம் காட்டி வருகின்றனர் இருப்பினும் நாயினை நேற்று மாலை வரை பிடிக்க முடியவில்லை இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளக்கூடிய வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் பாடை காவடி திருவிழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் அதற்கு உள்ளாக வெறி நோயால் பாதிக்கப்பட்ட நாயை பிடிக்க பேரூராட்சியினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் சிவப்பு நிறத்தில் உள்ள நாய் ஒன்று பொதுமக்களை கடித்து வருவதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முன்னெச்சரிக்கை பரவி வருகிறது. இது அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பேரூராட்சி நிர்வாகம் அதிரடி

Related Stories: