பொதுமக்கள் வலியுறுத்தல் ராகுல்காந்தி கைது கண்டித்து மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பிரதமர் மோடி குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது தவறாக பேசி யதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண் டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று நாடு முழுவதும் பல்வேறு போராட்டங் களில் ஈடுபட்டனர். அதில் ஒரு பகுதியாக, ஒன்றிய அரசை கண்டித்து நகர தலைவர் கனகவேல் தலைமையில் மன்னார்குடி தேரடி காந்தி சிலை அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், வடுகநா தன், அனந்த கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் சங்கு கோபால், மாவட்ட சேவாதள தலைவர் பழனி வேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய அரசை கண்டித்தும் , பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கோஷங் களை எழுப்பினர்.

Related Stories: