×

கறம்பக்குடி அருகே இடிந்து விழும் அபாய நிலையில் பயணிகள் நிழற்குடை கட்டிடம்

கறம்பக்குடி: கறம்பக்குடி அருகே பழுதடைந்த இடிந்துவிழும் நிலையில் ஆபத்தான பேருந்து நிழற்குடையை இடித்து அகற்றி புதிதாக கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குருச்சி ஊராட்சி அமைந்துள்ளது. இவ்வூராட்சியில் 5,000க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  இந்த ஊராட்சிக்குட்பட்ட சாந்தம்பட்டி கிராமத்தில் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  இந்த கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அங்குள்ள ஆலமரம் அருகே 30 வருடங்களுக்கு முன்பு பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டது.

இதன்மூலம் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பயனடைந்து வந்தனர். நாளடைவில் பேருந்து நிழற்குடையானது பழுதடைந்து பராமரிப்பின்றி பயன்பாட்டில் இல்லாமல் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் தற்போது பேருந்து நிழற்குடை இடத்தில் நிற்கும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். எனவே அரசு புதிதாக உடனடியாக பழுதடைந்த பேருந்து நிழற்குடையை இடித்து அப்புறப்படுத்தி புதிய நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Nizhalkudi ,Karambakudi ,
× RELATED கந்தர்வகோட்டையில் நடப்பு கல்வியாண்டிலேயே ஐடிஐ திறக்க வேண்டும்