திருமருகலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெருமுனை பிரசார கூட்டம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் கடைவீதியில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டக்குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்ட பொருளாளர் பொன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் லெனின், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் காரல் மார்க்ஸ், விவசாய தொழிலாளர் ஒன்றிய செயலாளர் பாரதி ஆகியோர் ஒன்றிய அரசின் விரோத போக்கை கண்டித்து பேசினார். கிளை செயலாளர் கோபி நன்றி கூறினார்.

Related Stories: