×

கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணகிரி, மார்ச் 23: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. ராயக்கோட்டையில் 11மி.மீ., மழையும் கிருஷ்ணகிரியில் 3மி.மீ., கேஆர்பி அணையில் ஒரு மில்லி மீட்டர் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு, நேற்று முன்தினம் விநாடிக்கு 420 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 353 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு 420 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 41.66 அடிக்கு தண்ணீர் உள்ளது. அதே சமயம், கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 341 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 400 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 515 கனஅடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 48.65 அடிக்கு தண்ணீர் உள்ளது.

Tags : KRP Dam ,
× RELATED கேஆர்பி அணைக்கு நீர்வரத்து 350 கனஅடி