தமிழகத்திற்கு பெருமை தேடி தருவதே லட்சியம் என பேட்டி கலைஞரின் வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கல்

வலங்கைமான்: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் முலாழ்வாஞ்சேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்

வளர்ச்சித் திட்டம் என்ற மாபெரும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தின் கீழ், அனைத்து கிராமங்களும் ஒட்டு மொத்த வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற வேண்டும் என்பதே நோக்கமாகும். பத்தாண்டு தொலைநோக்கு திட்டமான 11.75 லட்சம் எக்டேர் நிலங்களை கூடுதலாக சாகுபடிக்கு கொண்டு வருதல், இருபோக சாகுபடி பரப்பினை 20 லட்சம் எக்டராக உயர்த்துதல், உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, நிலக்கடலை பயிர்களின் ஆக்கத்திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்தல் ஆகிய தொலைநோக்குத் திட்டங்களை அடைந்திடும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கிராமப் பஞ்சாயத்துக்களில் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ், தென்னங்கன்றுகள், பயறுவகை விதைகள், தெளிப்பான்கள், வீட்டுத் தோட்டம் அமைக்க காய்கறி தொகுப்புகள், தோட்டக்கலை பயிர்சாகுபடிக்கு ஊக்கத் தொகை பழக்கூடைகள் மற்றும் ட்ரம், பழச்செடிகள், மரக்கன்றுகள் தொகுப்புகள், தரிசு நிலத் தொகுப்புகளில் ஆழ்துளை, குழாய்க்கிணறு அமைத்தல், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கிணறு அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல் போன்ற செயல்பாடுகள் இக்கிராமப் பஞ்சாயத்துக்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வலங்கைமான் நடத்த மூலாழ்வாஞ்சேரி கிராமத்தில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை ஒன்றிய குழு உறுப்பினர் அன்பரசன் வழங்கினார். நிகழ்ச்சிகள் திமுக நிர்வாகிகள் நீலகண்டன், பரமசிவம், சிங்காரவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: