×

மகளிர் காவலர்களின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி விராலிமலையில் வரவேற்பு

விராலிமலை: விராலிமலையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை செல்லும் மகளிர் காவலர்கள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வழியனுப்பு நடைபெற்றது. தமிழ்நாடு மகளிர் காவல்துறையின் பொன்விழா 50வது ஆண்டுவிழாவை முன்னிட்டு கடந்த 17ம் தேதி முதல் வரும் 27 ம் தேதி வரை சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் சைபர் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதைக்கு அடிமையாக வேண்டாம் என்பதை மக்களுக்கு உணர்த்தும் விதமாகவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை ஜாம்பஜார் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையில் கடந்த 17ம் தேதி சென்னையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று (22ம் தேதி) புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வந்தடைந்தது. சைக்கிள் பேரணியில் பங்கேற்ற பெண் காவலர்களுக்கு வழிநெடுக பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் காவலர்கள், பொதுமக்கள் கைகளை காட்டியபடி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து விராலிமலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் ஓய்வு எடுத்த குழுவினர் மதிய உணவிற்கு பின் மாலையில் புறப்பட்டு கன்னியாகுமரியை நோக்கி சைக்கிள் பேரணியை தொடர்ந்தனர். அவர்களை காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாய் வழி அனுப்பி வைத்தனர்.








Tags : awareness ,Viralimalai ,
× RELATED அவள்‘ திட்டத்தின் கீழ், வெலிங்டன்...