தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் புதுக்கோட்டைக்கு இன்று வருகை

புதுக்கோட்ட:தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் புதுடெல்லியிருந்து விமான மூலம் புறப்பட்டு இன்று (23ம் தேதி) காலை 7.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அங்கு அவருக்கு திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக சிறப்பாக வரவேற்பளிக்கப்படுகிறது.திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு வருகைதரும் ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்தை மாத்தூர், கீரனூர், நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்கிறார்கள்.பகல் 10.00 மணியளவில் புதுக்கோட்டை திலகர் திடலில் உள்ள அவரது இல்லத்திற்கு வருகைபுரிகிறார்.அங்கிருந்து காலை 11.00 மணியளவில் புறப்பட்டு போஸ் நகர் நேதாஜி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, சின்னப்பா பூங்கா, அண்ணா சிலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் PLA ரவுண்டானா வழியாக திருவப்பூர் சாலையில் உள்ள மாவட்ட பாரதிய ஜனதா கட்சி புதிய அலுவலகத்தில் பகல் 12.00 மணிக்கு கட்சி நிர்வாகிகளை சந்திக்கின்றார். பின்பு மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை லேணா திருமண மண்டபத்தில் முக்கிய பிரமுகர்கள் நண்பர்களிடம் வாழ்த்துக்கள் பெறுகிறார். அங்கு நடைபெறும் மதியவிருந்து உபசரிப்பில் கலந்து கொண்டபின் மாலை 3. மணியளவில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான அரசு பணிகளை ஆய்வுரை செய்கிறார். பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். இரவு மலைக்கோட்டை விரைவு இரயில் மூலம் திருச்சியிலிருந்து சென்னை செல்கிறார்.

Related Stories: