பேச்சுக்கலை பயிற்சிப் பட்டறை

கூடலூர்: கம்பம்  ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில், தமிழ்துறையின் சார்பில், ‘‘எஃபக்டிவ் பப்ளிக் ஸ்பீச்’’ என்ற தலைப்பில், பொது இடங்களில் திறமையாகப் பேசுவதற்கான பயிற்சியைக் கொடுக்கும் பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி, கல்லூரி முதல்வர் ரேணுகா மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் சர்மிளா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இப்பயிற்சியின்போது பொது இடங்கள் மற்றும் மேடைகளில் பயமில்லாமல் பேசுவது எப்படி? என்று மாணவிகளுக்கு விளக்கப்படத்துடன் எடுத்துரைக்கப்பட்டது. பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகள் அனைவரும் ஏழு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அவர்கள் தனித்தனியாக பேசுவதற்கும் பயிற்சியளிக்கப்பட்டது. இதில் 80க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். பயிற்சிப் பட்டறையில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. சின்னமனூர் ரவி, சதீஷ்குமார், செல்வக்குமார், சக்திவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பேராசிரியை தமிழ்ச்செல்வி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

Related Stories: