திருவாடானை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம்

திருவாடானை: திருவாடானை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் தலைவர் இலக்கியாராமு தலைமையிssல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி எடுத்துக் கூறி 2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மேலும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் பிறகு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேஸ்வரி, சிறப்பு அலுவலர் கருப்பையா, ஒன்றிய பார்வையாளர் சங்கீதா, துணைத்தலைவர் மகாலிங்கம், ஊராட்சி செயலர் சித்ரா உட்பட வார்டு உறுப்பினர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: