×

மதுரையில் மார்ச் 25ல் திமுக செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர்கள் அறிக்கை

மதுரை: மதுரையில் மார்ச் 25ல் மதுரை வடக்கு - தெற்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது என மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் பி.மூர்த்தி, சேடபட்டி மணிமாறன் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்களது அறிக்கை; மார்ச் 25ம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மதுரை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரில் உள்ள மேனேந்தல் திடலில் மதுரை வடக்கு - தெற்கு மாவட்ட கழக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆலோசனையின்படி எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற உழைப்பது, பூத் கமிட்டி குறித்தும் திமுக ஆக்கப்பணிக்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டக்கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், ஊராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், கழகத்தினர் என அனைவரும் பெரும் திரளாக பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


Tags : District Secretaries ,DMK ,Madurai ,
× RELATED அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...