×

பழநி அருகே வனப்பாதுகாப்பு விழிப்புணர்வு

பழநி: பழநி அருகே பாலசமுத்திரத்தில் பள்ளி மாணவர்களுக்கு வனத்துறை சார்பில், வனப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உலக வன நாளையொட்டி பழநி அருகே பாலசமுத்திரம் இலஞ்சியம் நர்சரி பள்ளியில் வனத்துறை சார்பில் வனப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் தாளாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாகி சுசீலா முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் பாலசந்தர் வரவேற்றுப் பேசினார். பழநி வனச்சரக அலுவலர் பழனிக்குமார் வனத்தின் முக்கியத்துவம், பாதுகாப்பு, வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டம், மரம் வளர்ப்பதன் அவசியம், வேட்டையில் ஈடுபட்டால் கிடைக்கும் தண்டனைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து மாணவர்களின் சிலம்பாட்டம் மற்றும் விழிப்புணர்வு நடன,நாட்டிய நிகழ்ச்சிகளும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடந்தன.

Tags : Palani ,
× RELATED பன்றிகள் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு