×

காஞ்சிபுரத்தில் யதோத்தகாரி பெருமாள் கோயில் தேர் திருவிழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

காஞ்சிபுரம், மார்ச் 22: காஞ்சிபுரம் யதோத்தகாரி பெருமாள் கோயிலில், பங்குனி மாத பிரம்மோற்சவத்தின் 7ம்  நாளானா நேற்று தேர் திருவிழா  கோலாகலமாக நடந்தது. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, தேரினை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து சென்றனர். காஞ்சிபுரத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீயதோத்தகாரி பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த 15ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால், யதோத்தகாரி பெருமாளுக்கு தினமும் காலை, மாலை என இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு வீதிஉலா வந்து பக்தர்களுக்கு  காட்சி அளிப்பார்.

அந்த வகையில், யதோத்தகாரி பெருமாள் கோயில் பங்குனி பிரம்மோற்சவத்தின் 7வது நாளான நேற்று திருத்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த, திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, பெரிய பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீயதோத்தகாரி பெருமாளுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மல்லிகை பூ, மலர் மாலைகள் அணிவித்து துப, தீப ஆராதனைகள் நடைபெற்றது.

இந்த திருத்தேர் விழாவில், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரினை வடம் பிடித்து இழுத்துச் செல்ல, காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வாத்தியங்கள் மேளதாளங்கள் முழங்க வேதபாராயணம் ஓலிக்க, பஜனை கோஷ்டியினர் ஆடிபாடி வர, சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் திருத்தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருத்தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு பெருமாளை வணங்கி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். தார். அப்போது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து, தரிசனம்  செய்தனர்.

Tags : Yadottakari Perumal Temple Chariot Festival ,Kancheepuram ,Sami Darshan ,
× RELATED செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...