உலக தண்ணீர் தினத்தையொட்டி தச்சநல்லூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

நெல்லை, மார்ச் 22: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நெல்லை  தச்சநல்லூரில்  நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல் மற்றும் மாணவ- மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

 ஆண்டுதோறும் உலக  தண்ணீர் தினம் நெல்லையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டுக்கான தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தச்சநல்லூரில்  நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நெல்லை மாவட்ட உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அப்போது அவர், நீர்நிலைகளை பாதிக்கும்  காரணிகள், அவற்றில் இருந்து பாதுகாக்கும் வழிமுறை மற்றும் பராமரிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

இதைத்தொடர்ந்து பேரிடர்  மேலாண்மை தாசில்தார் செல்வன், குழந்தைகள் நல மருத்துவர் சத்யாதித்,  ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் நல்லபெருமாள், ஓய்வூதியர் சங்க மகளிர் அணியின்  மண்டல அமைப்பாளர் தேவிகா, மக்கள் திறன் மேம்பாட்டு மன்றத்தலைவர்  அரிகாரசிவன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  நிகழ்ச்சியில் தச்சநல்லூர்  பகுதியில் செயல்படும் கைலாசம் பிள்ளை நடுநிலைப் பள்ளி, காமராஜர் மெட்ரிக் பள்ளி, டிடிடிஏ துவக்கப்பள்ளி, கே.எம்.ஜி. பிரைமரி பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் சுமார் 250 பேர் பங்கேற்றனர். இவர்களுடன் நீர்நிலை பாதுகாப்பு குறித்து தன்னார்வலர்கள் கலந்துரையாடினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் மஞ்சப்பை இலவசமாக  வழங்கப்பட்டது.

Related Stories: