திருச்சி தேசியக் கல்லூரியில் வணிகவியல் பேரவைக்கூட்டம்

திருச்சி: திருச்சி தேசியக் கல்லூரி குளிர்மை கலையரங்கில் வணிகவியல் பேரவைக் கூட்டம் நடைபெற்றது . சிறப்பு விருந்தினராக பக்தி வேதாந்த கலாச்சார மற்றும் கல்வி அகாடமி தலைவர் ராதிகா வல்லபதாஸ் கலந்து கொண்டு தேர்வா அல்லது வாழ்க்கையா? என்ற தலைப்பில் உரையாற்றினார். கல்லூரி முதல்வர் பொறுப்பு முனைவர் கி. குமார் தலைமையுரையாற்றினார். முனைவர் இரா. சுந்தரராமன் வாழ்த்துரை வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை முனைவர் சவுரியார் துரைசாமி செய்தார். முன்னதாக இளநிலை மூன்றாமாண்டு வணிகவியல் பயிலும் மாணவர் அஸ்வின் விஷ்வநாத் வரவேற்றார். இளநிலை மூன்றாமாண்டு மாணவர் முரளிதரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மாணவிகள் ஜெய மற்றும் அட்சய லட்சுமி ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் திரளான பேராசிரியர்கள் , மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

Related Stories: