×

நுகர்வோர் பாதுகாப்பு மையம் வலியுறுத்தல் பட்ஜெட்டிற்கு விவசாயிகள் பெருத்த வரவேற்பு தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை திட்டத்தின் கீழ் தமிழ் கனவு நிகழ்ச்சி

திருவாரூர் : தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை திட்டத்தின் கீழ் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : திருவாரூர் மாவட்டத்தில் தமிழ் மரபு பண்பாட்டு பரப்புரை திட்டத்தின் கீழ் மாபெரும் தமிழ்க் கனவு என்னும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சாரு  தலைமையில் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நாளை (வியா ழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நீடாமங்கலம் அடுத்த கோவில்வெண்ணி கிராமத்தில் உள்ள அஞ்சலை அம்மாள் மகா லிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில், கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு தமிழ்க்கனவு திட்ட த்தில் தங்களது பங்களிப்பை அளித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Consumer Protection Center ,
× RELATED வெயில் தணித்த நல்ல மழை...