வம்பன் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

ஆலங்குடி: வேளாண்மை அறிவியல் நிலையம் வம்பனில் கிராமப்புற இளைஞர்களுக்குகான காளான் வளர்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி கடந்த துவங்கியது. இப்பயிற்சியை வேளாண்மை அறிவியல் நிலையம் வம்பன் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை புதுக்கோட்டை இணைந்து வழங்குகின்றனர்.  இப்பயிர்ச்சியினை திட்ட ஒருங்கிணைப்பாளர் யுவராஜா துவக்கி வைத்து காளான் உற்பத்தியில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் பங்கு மற்றும் சந்தை வாய்ப்புகளை பற்றி விளக்கமளித்தார். மேலும் வேளாண்மை துணை இயக்குனர் (அட்மா) இளைஞர்கள் சுயதொழில் முனைவோராக வளர இப்பயிற்சியில் உள்ள சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார்.  வேளாண்மை அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானிகள் காளான் வளர்ப்பு தொழில் நுட்பங்களை எடுத்துரைத்தனர். இப்பபயிற்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: