கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ”எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டம்\\” என்ற நிகழ்ச்சி தலைமை ஆசிரியை விஜயலெட்சுமி வழிகாட்டுதல்படி நடைபெற்றது. பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் சுதா வரவேற்றார். ஆசிரியர் மாலா தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி பேசும்போது, எண்ணும் எழுத்தும் கற்றல் கொண்டாட்டங்கள் தினந்தோறும் நடைபெறுகிறது. மாணவர்கள் அதை பயன்படுத்தி கல்வியறிவு பெற வேண்டும் என்றார். ஆசிரியர் பயிற்றுநர் பாரதிதாசன் பேசும்போது, நாங்கள் ஆய்வுக்கு செல்லும்போது மாணவர்களிடம் கற்றல் நல்ல முன்னேற்றம் உள்ளது என்றார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சாந்தி, பாக்கியராஜ், மைவிழி, வெங்கடேசன் மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் யாஸ்மின் சித்திகா கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Related Stories: