வேதாரண்யம் தாலுகா துளசியாபட்டினத்தில் ரூ.18 கோடியில் ஒளவைக்கு மணிமண்டபம்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா துளசியாப்பட்டினத்தில் ரூ.18.5 கோடியில் ஔவைக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தூளாசியாபட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள ஔவையார் கோயிலில் தமிழக அரசின் சார்பில் 49வது அவ்வை பெருவிழா துவங்கியது. நிகழ்ச்சிக்கு நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்து பேசியதாவது: துளசியாப்பட்டினத்தில் ஒளவைக்கு விழா எடுப்பது பெருமைக்குரியது. இந்த விழா கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக நடத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும். இந்த விழா நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும். எதிர்காலத்தில் தமிழகத்தில் தமிழுக்கு நடைபெறும் விழாவாக இந்த அவ்வை பெருவிழா அமையும். ஒளவையின் படைப்புகள் காலத்தால் அழியாதவை அவற்றை நாம் பயனுள்ளதாக மாற்றி கொள்வோம் ஒளவைக்கு துளசியாபட்டினத்தில் ரூ.18.5 கோடி மதிப்பில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ராணி, இணை ஆணையர் ராமு, ஆய்வாளர் ராம்தாஸ், செயல் அலுவலர் அசோக்குமார், கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி, ஊராட்சி தலைவர்கள் தமிழ் செல்வி, வனிதா, ஒன்றியக்குழு உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இலக்கிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்பு ராஜ் பரிசு வழங்கினார். தஞ்சை கலை பண்பாட்டு துறையினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

Related Stories: