சிவகாசி அருகே ஒன்றரை டன் ரேசன் அரிசி பறிமுதல்

சிவகாசி: சிவகாசி அருகே மீனம்பட்டியில் கடத்தப்பட்ட ஒன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சிவகாசி அருகே மீனம்பட்டியில் ரேஷன் அரிசி கடத்துவதாக சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வட்ட வழங்கல் அலுவலர், வருவாய் ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்ட அலுவலர்கள் மீனம்பட்டியில் சோதனை செய்தனர். அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்கையில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிய வந்தது. லாரியில் வந்த திருவேங்கடம் உமயதலைவன்பட்டி சிவா(23), வடக்கு பாறைப்பட்டி முத்துக்குமார்(31), மகாதேவர்பட்டி கண்ணன்(28) ஆகியோரை கைது செய்து விருதுநகர் குடிமை பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி சிவகாசியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: