×

சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் துணைவேந்தர் ஜி.ரவி பேச்சு

காரைக்குடி: காரைக்குடியில் நேஷனல் கேட்டரிங் மற்றும் பயர் அண்டு சேப்டி கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரிகளின் தாளாளர் சையது வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில், ‘‘கல்விதான் நமக்கு மிகப்பெரிய சொத்து. நாம் நினைக்கும் அனைத்து உயர்நிலைகளுக்கும் கல்வியால் மட்டுமே கொண்டு செல்ல முடியும். இந்தியாவில் சுற்றுலாத் துறை வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 8 மில்லியன் மக்கள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு வருகை புரிவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு என பல்வேறு நட்சத்திர தங்கும் விடுதிகள் அதிக அளவில் கட்டப்படுகின்றன. சுற்றுலாத் துறை வளர்ச்சியின் மூலம் உள்கட்டமைப்பு அதிகரித்து வருவதால், கேட்டரிங் துறைக்கு சார்ந்த படித்த மாணவர்களுக்கு இன்று வேலைவாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.

இளைஞர்கள் சீரிய சிந்தனை மூலம் சிறந்த படைப்பாற்றலை வளர்த்துக் கொண்டு எதையும் வித்தியாசமாக முறையில் உருவாக்கி பிறரை கவரும் வகையில் செயல்பட வேண்டும். வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்தது. எனவே எதையும் எதிர்கொள்ள தேவையான தனித்திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இளைஞர்கள் முடிவெடுக்கும் திறன், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன், படைப்பாற்றல் திறன், பேச்சு மற்றும் தனிப்பட்ட திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிகுழு உறுப்பினர் குணசேகரன், பல்கலைக்கழக இணைவுகல்வி திட்ட இயக்குநர் வீரரவி, கல்லூரி இயக்குநர் மனோகரன், சிஇஓ தினேஷ், முதல்வர் தனசீலன், தொழில் வணிகக்கழக தலைவர் சாமி திராவிடமணி, செயலாளர் கண்ணப்பன், பொருளாளர் சரவணன், கந்தசாமி, நிக்சன் அசாரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Vice Chancellor ,G. Ravi ,
× RELATED மீனவர்கள் மீன் வளர்ப்பில் நவீன...