மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கண்ஸ்ட்ரக்டிவ்- 2023 கட்டுமான கண்காட்சி

மதுரை: பிரின்ஸ் இந்தியா எக்ஸ்சிபிஷன் நிறுவனம் வரும் மார்ச் 24 முதல் மார்ச் 26 வரை 3 நாட்கள் “கண்ஸ்ட்ரக்டிவ் 2023’’ என்ற பெயரில் மாபெரும் கட்டுமான கண்காட்சியை மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நடத்துகிறது. இக்கண்காட்சியில் ஆர்க்கிடெக்ட்கள். சிவில் இன்ஜினியர்கள், பில்டர்கள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர். இதில் கட்டுமான பொருட்கள், வீடு மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான உள் மற்றும் வெளி அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் துவங்கி தொழிற்சாலைகள் உள்பட அனைத்து விதமான கட்டிடங்கள் கட்டுவதற்கும் தேவையான கட்டுமான பொருட்கள் இடம்பெற உள்ளன. அலங்கார முகப்புகள், பல்வேறு வகையான டிசைன்களில் மற்றும் வண்ணங்களில் ஆன கண்ணாடி வகைகள், தானியங்கி கதவு வகைகள், மின்சார வயர்கள், விளக்குகள் மற்றும் சுவிட்ச் பாக்ஸ்கள் உள்ளிட்ட பொருட்களும் இடம் பெறுகின்றன.

பர்னிச்சர்கள் தயாரிப்பு நிறுவனங்கள், கிரீன் பில்டிங்ஸ் மற்றும் நிறுவனங்கள் அபார்ட்மெண்ட், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் என ஏராளமான அரங்குகள் இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளன. கண்காட்சியில் பொதுமக்கள் மற்றும் புதிய வீடுகள் கட்ட திட்டமிடுவோர், ஆர்க்கிடெக்ட்கள், பில்டர்கள் இண்டீரியர் டெக்கரேட்டர்கள் சிவில் மற்றும் ஸ்டக்ட்சுரல் என்ஜினியர்கள் பிராப்பர்ட்டி டெவலப்பர்கள், காண்ட்ராக்டர்கள் மற்றும் கன்சல்டன்ட்கள் என ஆயிரக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் இருந்து வந்து பார்வையிட உள்ளனர். மதுரை ராஜா முத்தயைா மன்றத்தில் கண்காட்சி நடக்கும் 3 நாட்களும் காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். இத்தகவலை கண்காட்சி பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: