×

கிட்டாம்பாளையத்தில் ஆதார் திருத்த சிறப்பு முகாம்

சோமனூர்:  சோமனூரில் அடுத்த கிட்டாம்பாளையம் ஊராட்சி மற்றும் அஞ்சல்துறையும் இணைந்து  கிட்டாம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் விஎம்சி.சந்திரசேகர் தலைமையில் கடந்த 2 நாட்களாக ஆதார் அட்டை திருத்த முகாம் நடைபெற்றது.  இதில், 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் முகவரி மாற்றம் உள்ளிட்டவை சரி செய்து பயனடைந்தனர். ஒன்றிய அரசு ஆதார் அட்டை கட்டாயப்படுத்தியதை அடுத்து இந்திய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியம் தேவைப்படுகிறது.

அரசு சார்ந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்பட்டு வருவதால் அனைவரும் கட்டாயம் எடுத்தாக வேண்டியது உள்ளது.  முதல் முறையாக, ஆதார் அட்டை அமல்படுத்திய போது பல்வேறு பகுதியில் குளறுபடிகளுடன் முகவரி தவறுதலாக அச்சிடப்பட்டுள்ளது.  இவற்றை சரிசெய்யும் முகாம் அனைத்து தபால் நிலையத்தின் சார்பில் நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமில் ஆதார் அட்டையில் உள்ள பிழை நீக்குவதற்கு உரிய ஆவணங்களுடன் ரூ.50 கட்டணமும், புதிதாக ஆதார் அட்டை எடுப்பதற்கு இலவசமாகவும் எடுத்து பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.


Tags : Aadhaar Edit ,Kitampolayam ,
× RELATED விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் ; 2 பேர் கைது