கலெக்டர் அழைப்பு திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகளிலும் நாளை கிராமசபை கூட்டம் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள அழைப்பு

திருவாரூர், மார்ச் 21: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் நாளை கிராம சபைக்கூட்டங்கள் நடைபெறுவதால் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் உலக தண்ணீர் தினமான நாளை (மார்ச் 22) கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்களில் சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மற்றும் இதர தலைப்புகளில் விவாதிக்கப்படவுள்ளது.

கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப் பணிகள் தேர்வு, பயனாளிகள் தேர்வு குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்ற இருக்கிற கிராமசபை கூட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதோடு, தங்கள் ஊராட்சியின் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பையும் முழுமையாக வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

Related Stories: