கட்டிமேடு ஊராட்சியில் மானிய விலையில் பழமரக்கன்று பொதுமக்களுக்கு விநியோகம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 21: கட்டிமேடு ஊராட்சியில் பொதுமக்களுக்கு மானிய விலையில் பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சியில் கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானிய விலையில் பழ மரகன்றுகளான மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, சீத்தா போன்ற ஐந்து வகையான பழ கன்றுகள் வழங்கும்விழா நடைபெற்றது.

கட்டிமேடு ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் முன்னிலையில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையில் இருந்து தோட்டக்கலை உதவி இயக்குனர் இளவரசன் அறிவுறுத்தலின்படி உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கார்த்திகேசன், ஹரிஹரன் ஆகியோர் வாகனம் மூலம் ஊராட்சி முழுவதும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி துணைத் தலைவர் பாக்யராஜ் செயலர், புவனேஸ்வரன், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: