மாமல்லபுரத்தில் நடந்த போட்டியில் தமிழ் பல்கலைக் கழக மாணவர்களுக்கு பதக்கம்

தஞ்சை, மார்ச் 21: தமிழ்ப் பல்கலைக்கழகம், சிற்பத்துறையில் முதுநுண்கலை சிற்பம் பயின்று வரும் முதலாமாண்டு மாணவர்கள் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றனர். தமிழ்ப் பல்கலைக்கழக பஞ்சலோகச் சிற்பம் பயிலும் இளங்கோவன், இளவரசன், கற்சிற்பம் பயிலும் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பூம்புகார் மாவட்ட கைத்திறன் விருது” சான்றிதழ், ரூ.10,000க்கான காசோலை மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

மாமல்லபுரத்தில் நிகழ்ந்த விழாவில் சிறுகுறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பதக்கங்கள் வழங்கினார். தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் சான்றிதழ், பதக்கம், காசோலை வென்ற மாணவர்களை பாராட்டினார். நிகழ்ச்சியில் துறைத்த லைவர் முனைவர் லதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: