மல்லாங்கிணறு பேரூராட்சியில் ரூ.12 லட்சத்தில் புதிய அங்கன்வாடி: அமைச்சர் தங்கம்தென்னரசு திறந்து வைத்தார்

காரியாபட்டி, மார்ச் 21: காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அங்கன்வாடி புதிய கட்டிடம் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதை அங்கன்வாடி குழந்தைகள் பயன்பாட்டிற்காக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திமுக பேரூராட்சி சேர்மன் துளசிதாஸ் தலைமை வகித்தார்.

துணை சேர்மன் மிக்கேலம்மாள், செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், கவுன்சிலர்கள் உதயசெல்வி, செல்லம்மாள், அழகு, அனிதா, பாலச்சந்திரன், புகழேந்திரன், ராஜேஸ்வரி, மகாலிங்கம், கருப்பையா, செல்வராஜ், சுமதி, போஸ்ஜெயசந்திரன், வைஷ்ணவி, அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: