காரைக்குடி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

காரைக்குடி, மார்ச் 21: காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் இன்டர்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்விஇயக்குநர் டாக்டர் ராஜேஸ்வரி வரவேற்றார். பள்ளிகுழும தலைவர் சத்தியன் தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் சங்கீதா சத்தியன் முன்னிலை வகித்தார். டாக்டர் விவேகானந்தன், டாக்டர் இந்துமதி ஆகியோர் பட்டங்களை வழங்கி பேசுகையில், ‘பெற்றோர்கள் குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். தற்போது செல்போன் தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. ஆனால் அதற்கான நேரத்தை குறைத்து, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட வேண்டும். புத்தக வாசிப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களின் கடந்த கால அனுபவங்களை தங்கள் குழந்தைகளுக்கு கூறி வளர்க்க வேண்டும்’ என்றார். முதல்வர் தேவராஜூ நன்றி கூறினார்.

Related Stories: