சிங்கம்புணரி, மார்ச் 21: சிங்கம்புணரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 85 வயது மூதாட்டி பலியானார். சிங்கம்புணரி அருகே பூலாம்பட்டியை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மனைவி வீரம்மாள்(85). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. நேற்று காலை தேனம்மாள்பட்டியில் வசித்து வரும் தனது மகளின் வீட்டிற்கு, வீரம்மாள் நடந்து சென்றுள்ளார் மேட்டுப்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் எஸ்.வி.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.