பனை மரம் விழுந்து மின்தடை ஜெனரேட்டர் வசதியுடன் தேர்வு எழுதிய பிளஸ் 1 அரசுப்பள்ளி மாணவர்கள்

திருவாடானை, மார்ச் 21: திருவாடானையில் மழை பெய்ததால் மின்கம்பத்தில் பனைமரம் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஜெனரேட்டர் வசதி செய்யப்பட்டு தேர்வு எழுதினர்.திருவாடானையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அருகே அரசு பயணியர் விடுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு திடீரென காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது.

இதில் பயணியர் விடுதியில் இருந்த பனை மரங்கள் காற்றில் அருகில் இருந்த மின்கம்பத்தில் விழுந்து மூன்று மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது. இதனால் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மின்சாரம் இல்லாமல் பிளஸ் ஒன் தேர்வு மாணவர்கள் எழுத முடியாமல் தவித்தனர். இதையடுத்து உடனடியாக ஜெனரேட்டர் ஏற்பாடு செய்யப்பட்டு ஜெனரேட்டர் உதவியுடன் தேர்வு எழுதி முடித்தனர். மின்வாரிய ஊழியர்கள் மரங்களை அகற்றி மின் விநியோகம் செய்தனர்.

Related Stories: