திருமருகல் அருகே மகளிர் சுய உதவி குழுவினர் தயாரிக்கும் பொருட்கள்

நாகப்பட்டினம்: திருமருகல் அருகே மகளிர் சுய உதவி குழுவினர் தயாரிக்கும் பொருட்களை மகளிர் சுய உதவி குழுவினர் பார்வையிட்டனர். திருமருகல் அருகே திருப்புகலூரில் மகளிர் சுய உதவி குழு சார்பில் தையல் பயிற்சி இயங்கி வருகிறது. திருப்புகலூர் ஊராட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டு ஊராட்சியில் உள்ள அனைவரும் நெகிழிப்பை பயன்படுத்துவதை தவிர்த்து மஞ்சள் பையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மஞ்சள் பை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

அதே போல் தேன் வளர்ப்பு பயிற்சி, பேப்பர் கப் தயாரித்தல், காளான் வளர்ப்பு, மரக்கன்றுகள் பயிரிடுதல் உள்ளிட்ட பணிகளை மகளிர் சுய உதவி குழுவினர் பார்வையிட்டனர். இதில் ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளில் மகளிர் சுய உதவி குழுவினர், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பினர் ஊராட்சிக்கு மூன்று பேர் விகிதம் கலந்து கொண்டு பார்வையிட்டனர்

Related Stories: