திருப்பூர், மார்ச் 21: நலவாரியத்தை சீர்படுத்தி செயல்படுத்தக்கோரி கிராம கோவில் பூசாரிகள் பேரவையினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு அம்மன் வேடத்தில் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் திருப்பூர் கோட்ட அமைப்பாளர் சின்னக்குமரவேல் தலைமை வகித்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் திருச்செல்வன், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் காசி சிவா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.